Tuesday, October 03, 2006

நிலாவைப் பார்த்தேன்

நிலா - என்றும் என் மனதைக் குளிர வைக்கும் நிலா, இன்று ஏனோ வித்தியாசமாக தெரிந்தது. சூரியனின் ஒளி அதன் மேல் படுவதால் மட்டுமே அது நம் கண்ணுக்கு தெரிகிறது. இங்கிருந்து பார்க்க அழகாக இருந்தாலும், அருகில் சென்றால் இந்த அழகு தெரியாது. இவ்வளவு வெண்மையாக வெளிச்சம் இருக்கும் அந்த இடத்தில் இப்பொழுதுள்ள வெப்பம் நம்மால் தாங்கக் கூடிய அளவில் இருக்காது. ஆனால், இங்கே பூமியில் குளிர்ச்சி இருப்பதால் நிலவும் அப்படியே நமக்கு தோன்றுகிறது.

பகலில் ஒரு குளிர்ந்த கண்ணாடி அறையில் சூரியனைப் பார்த்தால் சூரியன் குளிர்ச்சியாக நமக்கு தெரியும். அதே போல் வெப்பம் நிறைந்த கண்ணாடி அறையில் இரவைக் கழித்தால், நிலா கண்டிப்பாக கொதிக்கும் அணல் போல்தான் நமக்கு தோன்றும். ஒரு பொருளோ, மனிதனோ இப்படிதான் என்று நாம் நினைக்கலாம், ஆனால் அதுவே உண்மை ஆகி விடாது.