ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே (2)
ஓவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேன்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரொட்டம்
ஒரு கணவு கன்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மணமே ஓ மணமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்பொம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியொடு போறாடு
மனிதா உன் மனதை கீரி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வறலாரா
துக்கம் இல்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மணமே ஓ மணமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஓவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேன்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
---ப.விஜய்
5 comments:
இந்த பாட்டு உனக்கு அவ்வளவு பிடிக்குமா?
முதல் முறை கேட்டபொழுதே ரொம்ப பிடித்தது. மனதில் எப்போதும் ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் பாடல். சென்ற வாரம் காரில் போகும்போது கேட்க நேர்ந்தது. 'வாழ்க்கை கவிதை வாசிப்போம்' என்ற வரி கேட்டவுடன் ஏதோ ஒரு ஞானோதயம் வந்தது போல் உணர்ந்தேன்.
இல்ல, மொதல்ல Englishல இருந்தது, அப்புறம் தமிழ்ல, So was wondering.
PS: உன் தமிழ் நல்லா இருக்கு. So, பேச மட்டும்தான் வராதா?
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியொடு போறாடு
இத்தனை செயற்கைத்தனமான பாடல் உனக்கு பிடித்ததா!?
இயற்கையான பாடல் செயற்கைதனமாக தெரிவது ஒரு வகை. செயற்கையான பாடலை இயற்கையான ஒன்றாக தெரிவிப்பன மற்றொரு வகை. இதில் இந்த பாடல் எந்த வகையைச் சார்ந்தது என்பது தெளிவாக தெரிகிறது.
பருத்தி வீரன் திரைப்படத்தில் வரும் 'டங்கா டுங்கா' பாடல் கேட்டதுண்டா?
படு மோசமாக முதலில் தோன்றும். நாலு முறை கேட்டால் உண்மை விளங்கும்!
Post a Comment