எனக்கு முதல் நண்பன் மூன்று, மூன்றரை வயதில் பள்ளியில் கிடைத்தான். அவன் பெயர் அச்சுத் என்று இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது.
கல்லூரி போனதும் பள்ளி நண்பர்களை மறப்பதும், வேலைக்குப் போனதும் கல்லூரி நண்பர்களை மறப்பதும், இடத்துக்கு ஏற்றபடி நண்பர்களை மாற்றிக் கொள்வதும்தான் பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. என்னால் நட்பை அப்படி வகைப்படுத்திப் பார்க்க முடிவதில்லை.
பொதுவாகவே, ஒருவருடன் உறவு ஏற்படுத்திக்கொண்டால், அது கடைசி வரை நீடிக்கும் என்றே நம்புவேன். ஆனால், நட்புக்கு மதிப்பு கொடுப்-பவர்கள் வெகு குறைவு என்பதை என் அனுபவம் உணர்த்தி-யிருக்-கிறது.
எனக்குக் கிடைத்த பல நல்ல நண்பர்கள், வேறு அவசியங்கள் வந்ததும், எங்கள் நட்பு குறித்த தங்கள் பார்வையை மாற்றிக்கொண்டதைக் கண்-டிருக்கிறேன்.
இன்றைக்கு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் என் முகத்தைப் பார்த்துவிட்டு, சில பழைய நண்பர்கள் தொடர்புகொண்டு பேசுவது உண்டு.
என் நண்பன் ஒருவன் என்னைவிட இரண்டு வயது சிறியவன். காற்றில் பறப்-பதற்காக கிளைடர் வடிவமைக்க முனைந்தபோது, எனக்கு உதவியவன். கிட்டத்-தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு அவனை அட்லாண்டாவில் சந்தித்-தேன். அந்தச் சந்திப்பு மிக இனிமையாக அமைந்தது. அன்றைக்கு நான் விதைத்த பறக்கும் ஆசை இப்போது அவனை விமானியாக்கி இருப்பதாகச் சொன்னான்.
இதைப் போல் இன்னும் பல பழைய நண்பர்களை என் யோகா வகுப்புகளில் அடையாளம் கண்டு பேசியிருக்கிறேன். அவர்கள் முன்பு பார்த்த ஜக்கி வேறு இன்று பார்க்கும் சத்குரு வேறு என்பதால், பலருக்கு என்னை அடையாளம் தெரிவதில்லை.
உயிரற்ற சிறு விஷயங்களாக இருந்தாலும், அவற்றுடன் தொடர்புவைக்-கையில், அதை ஆழமான உறவாகவே பார்க்கிறேன். மைசூர் நகரத்தின் பூமியு-டன், மரங்களுடன், மலைச் சாரல்களுடன் எனக்கு இருந்த ஈடுபாடு இப்-போதும் இருக்கிறது. அங்கு எனக்குள் எழுந்த லட்சக்கணக்கான கேள்விகளும், அத்-தனைக்கும் ஒரே கணத்தில் கிடைத்த பதிலும்கூட ஒருவித நட்புப் பிணைப்பு தான்.
இப்படி, செடியோ, அமரும் இடமோ, பாறையோ, பூவோ, மக்களோ, எதுவானாலும் அவற்றுடன் எனக்கு ஏற்படும் பிணைப்பு வாழ்க்கையின் மிகப் பெரும் ரகசியப் பரிமாணங்களைத் திறந்து காட்டியிருக்கிறது.
இன்றைக்குப் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்னுடன் தொடர்பு ஏற்படுகிறது. இதில் என்னுடையதைவிட அவர்களுடைய தேவையே அதிகமாக இருக்கிறது. ஆனாலும், அவர்கள் மீது நான் வைக்கும் நம்பிக்கையும் அவர் களுடன் எனக்கு நிகழும் பிணைப்பும் அவர்களிடத்தில் நேர்வதில்லை.
இதை ஒரு குற்றமாகச் சொல்லவில்லை. ஆனால், எதனுடனும் பிணைத்துக் கொள்ள முடியாத நிலை காரணமாக வாழ்க்கையில் எதையெல்லாம் இழக்-கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவதில்லை.
இந்தியாவில் ஆறு வருடங்கள் இருந்த ஒரு பெண் டாக்டர் அமெரிக்கா திரும்பும் முன் வியந்து பேசிய விஷயம் ஒன்று உண்டு.
''இங்கே எல்லாமே கூட்டாக நடக்கிறது. வகுப்பில் ஒரு மாணவி எழுந்திருப்-பாள். பாத்ரூம் போய் வர அனுமதி கேட்பாள். அனுமதித்ததும், 'மேடம், என்னு-டன் அகிலாவையும் அழைத்துப் போகலாமா?' என்பாள். பாத்ரூம் போவதற்குக் கூட யாரையாவது கூட்டிக்கொண்டு போகும் அளவு இந்தியாவில் சேர்ந்தே இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.''
அன்பினால் சேர்ந்து இயங்குவது மதிப்பானது. தேவையினால் சார்ந்து இயங்குவது அருவருப்பானது.
நண்பர்கள் விலகிப் போகையில், அது என் இதயத்தையே உடைத்துப் போட்டுவிடுவதில்லை. ஆனால், நல்ல நட்பை ஆழ-மான உறவாக பலப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறார்கள். அந்த விதத்தில், நட்பைப் பொறுத்த வரை, சமூக அளவு-கோல்-களில் கொஞ்சம் பின்தங்கியவனாகவே இருக்கிறேன்.
பள்ளியில் எனக்கு மிக நெருக்கமாக இருந்-தான் ஒரு நண்பன். இருவரும் சேர்ந்தே பல நூறு கி.மீ. சைக்கிளில் சுற்றியிருக்கிறோம். மலை-களில் அலைந்திருக்கிறோம். பள்ளி முடிந்து வேறு வேறு கல்லூரிகள் சென்-றோம். எங்கள் நட்பு தொடர்ந்தது. தொழில் செய்ய முனைந்த-போது, அவன் தேயிலைத் தோட்டங்கள் வாங்-கினான். திடீரென்று தொடர்-பைத் துண்டித்து-விட்-டான்.
ஏன் என்று 15 வருடங்-களுக்குப் பிறகு தான் தெரிந்தது. தொழிலில் மேலும் மேலும் நஷ்டமாகி, கடன் சுமை கூடிவிட்ட நிலையில், அவன் என்னைப் பார்க்கத் தயங்கி பின்வாங்கிவிட்டான். அவனை அழைத்தேன். ஒரு வேலை தந்-தேன். அவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்-டான். பின், ஆப்ரிக்காவில் வேலை தேடிக்-கொண்டான்.
அதற்காக நட்பை உபயோகமானது என்றோ, சாதகமானது என்றோ, வாழ்க்-கையை வளப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு என்றோ நான் ஒருபோதும்பார்த்--த-தில்லை.
70 வயது டாக்டர் ஒருவர் தன் நட்பு எப்படி சிதைந்துபோனது என்று என்-னிடம் சொன்னார்.
''முன்பெல்லாம் என் நண்பனைச் சந்திக்க வீட்டுக்கு எப்போது போனாலும், பியர் கொடுப்பான். உங்களைப் போல ஏதோ ஒரு குரு சொன்னார் என்பதற்காக, திடீரென்று குடிப்பதை நிறுத்திவிட்டான். எனக்கும் பியர் கொடுப்பதில்லை. அப்-பேர்ப்-பட்டவன் வீட்டுக்கு எப்படிப் போவேன்? எங்கள் நல்ல நட்பு சிதைந்து விட்டது.''
இது போல், ஏதோ ஒன்று வழங்கப்படும் வரைதான் சில நட்புகள் தாக்குப்பிடிக்-கின்றன.
உலகில் இன்று மிகுந்த செல்வாக்குள்ள தலை-வர்களுடன் பழகுகிறேன். ஒரு போதும் அவர்களுடைய தொடர்பைப் பயன்-படுத்திக்கொள்ள விரும்பியதில்லை. ஆனால், அவர்களுடன் சேர்ந்திருக்கும் கணங்களில் எங்களுக்குள் மிக ஆழமான-தோர் பகிர்தல் நிகழ்கிறது.
நண்பர்களுடன் பகிர்தல் என்பது கொடுக்கல் வாங்கல் அல்ல. அது ஒரு விதத்தில் ஒருவர் மற்றவரில் கரைந்து போதல். இதை உணர்ந்தவர்களால்தாம் நல்ல நண்பர்களாகத் தொடர முடியும்!
1 comment:
LOL, முதல் மூன்று அல்லது நான்கு பத்திகள் படிக்கும் வரை, இது நீ எழுதியது என்று நினைத்திருந்தேன். உன் நண்பன் விமானி ஆனதும் தான் புரிந்தது!
Post a Comment